விக்டோரியா மாநிலத்தில் இதுவரை காலமும் வாகனங்களை ஓராண்டு காலத்திற்கே பதிவு செய்ய முடியும். ஆனால் ஜனவரி முதலாம் திகதி முதல் குறுகிய காலத்திற்கு வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பன்னிரண்டு
மாதங்கள் என்று இல்லாமல் இனி மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கும் விக்டோரியா மாநிலத்தில் வாகனங்களின் பதிவை புதுப்பிக்க முடியும்.
myVicRoads online portalலில் பதிவு செய்து கணக்கினை துவக்கி, இப்புதிய சேவையினை பெற்றுக்கொள்ளலாம். இதுவரை கிட்டத்தட்ட 28,000 பேர் குறுகிய கால வாகனப் பதிவிற்கு மாறியுள்ளதாகவும் இவ்வருடம் முடிவதற்குள் விக்டோரியா மாநிலத்தில் வாகனம் வைத்துள்ள பாதி பேர் இக்குறுகியக்கால வாகனப் பதிவிற்கு மாறிவிடுவர் என்றும் VicRoads கூறுகிறது.
இப்புதிய நடைமுறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு வாகனத்தை பதிவு செய்ய கிட்டத்தட்ட 200.20 டாலர்களும், ஆறு மாதங்களுக்கு பதிவு செய்ய கிட்டத்தட்ட 400.40 டாலர்களும், ஓராண்டிற்கு பதிவு செய்ய கிட்டத்தட்ட 800.80 டாலர்களும் கட்டணம் அறவிடப்பட கூடும்.