கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கருக்கு கடந்த பல நாட்களாக மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது.
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து அவர் கவலைக்கிடமாக உள்ளார் எனவும் சுவாசக்கருவி பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த பின்னணியில் அவர் மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர்.
இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்த லதா மங்கேஷ்கர், 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ளார்.
லதா மங்கேஷ்கர் இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.
இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' கடந்த 2001ஆம் வருடம் வழங்கப்பட்டிருந்தது.
முன்னதாக அவர் பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
தமிழில் இவர் பாடிய பாடல்களில், சத்யா படத்தில் இடம்பெற்ற "வளையோசை கலகலவென" மற்றும் என் ஜீவன் பாடுது படத்தில் இடம்பெற்ற 'எங்கிருந்தோ அழைக்கும்' போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவையாகும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.