Wagga Waggaவிற்கு அருகிலுள்ள Murrumbidgee ஆற்றிற்கு அருகிலுள்ள Wilks Parkற்கு அவசரகால வெளியேற்ற எச்சரிக்கைகளை NSW மாநில அவசர சேவைகள் (SES) புதன்கிழமை பிற்பகல் வெளியிட்டது.
Murrumbidgee ஆறு இன்று மிதமான வெள்ள அளவை (9.00 மீற்றர்) தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வியாழன் காலை Wagga Waggaவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரைக்கு வெளியே North Wagga மற்றும் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு தென்கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் கடும் குளிர் மற்றும் பனியுடனான வானிலை மாற்றம் காணப்படுகிறது. இதனால் சிட்னி உட்பட பல நகரங்களில் பல வருடங்களுக்குப் பிறகு குளிரான நவம்பர் மாதம் ஆரம்பித்துள்ளது.
மத்திய மேற்கு நியூ சவுத் வேல்ஸில் வசிப்பவர்கள் பெரும் வெள்ளத்திற்கு தயாராகும் அதேநேரம் பனிப்பொழிவையும் அனுபவித்தனர்.
Wagga Wagga Showgroundsஇல் வெளியேற்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திங்கள் காலை முதல் பெய்த மழையால் Tumut ஆற்றில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மற்றும் Gundagaiயில் Murrumbidgee ஆற்றின் குறுக்கே பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அங்கு நதிநீர்மட்டம் ஏப்ரல் 1989 வெள்ளத்தை தாண்டியுள்ளது" என்று வானிலை அவதானிப்பு மையம் கூறியது.
Tumutடில் உள்ள ரிவர்கிலேட் Riverglade Caravan Parkவிற்கான வெளியேற்ற எச்சரிக்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
Narranderaவில் உள்ள Murrumbidgee ஆறு அடுத்த வார தொடக்கத்தில் பெரிய வெள்ள அளவை எட்டக்கூடும் என்றும், வியாழன் அன்று Darlington Point இல் மிதமான வெள்ள அளவை விட அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Hay என்ற இடத்தில் Murrumbidgee ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Moama Caravan & Tourist Parks, Cummeragunja, Moamaவின் சில பகுதிகள், Picnic Point, Poverty Point Madhora மற்றும் Murray ஆற்றை ஒட்டிய Barhamமின் சில பகுதிகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை தொடர்ந்து உள்ளது.
Echucaவில் உள்ள Murray நதியானது பெரும் வெள்ளத்திற்கு மேல் சுமார் 94.90 மீட்டர் உயரத்தில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
விக்டோரியாவின் Echuca, Moama, Torrumbarry மற்றும் Barham ஆகிய இடங்களில் பெரும் வெள்ளம் தொடர்கிறது.
Lachlan ஆற்றின் மத்திய மேற்கு NSW நகரமான Cowra மற்றும் Boorowa வின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் ஏற்கனவே வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Cowra, Cottons Weir மற்றும் Forbes ஆகிய இடங்களில் தற்போது மிதமான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், Nanami, Jemalong, Condobolin, Euabalong மற்றும் Hillston ஆகிய இடங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cowraவிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ள Forbesஇல் வெள்ளிக்கிழமை பெரும் வெள்ளம் ஏற்படும் என்று ஆய்வு மையம் கணித்துள்ளது.
சமீபத்திய மழையினால் Castlereaghஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, மேலும் வியாழன் அன்று Coonambleல் பெரும் வெள்ளம் ஏற்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இன்று (புதன்கிழமை) மாலை Hunter Valleyல் சிட்னிக்கு வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள Singletonல் மிதமான வெள்ளம் ஏற்படும் என பணியகம் எதிர்பார்க்கிறது.
Tamworthல் உள்ள Peel ஆற்றில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
Bureau of Meteorology, NSW SES, VIC SES ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.
பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.
நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.