ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஹாங்காங் குடிமக்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்குவது, மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வீசாவின் கால எல்லையை நீட்டுவது என்று புதிய அறிவிப்புகளை எமது அரசு வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரித்தானியக் காலனியான ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான குற்றவாளிகளை நாடுகடத்துவதற்கான ஒப்பந்தம் இடை நிறுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து SBS செய்திப் பிரிவினர் எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.