SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
60 நாட்களுக்கு வாங்கும் மருந்துகளின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்தது!

பார்மசி அல்லது மருந்தகங்கள் ஒரு நோயாளிக்கு மருந்துகளை 30 நாட்கள் மட்டுமே தருகின்ற முறையை மாற்றி, இனி 60 நாட்களுக்கு தரலாம் என்பதாக கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசின் புதிய திட்டத்தின்கீழ் சுமார் 300 மருந்துகளை தாம் இணைத்திருப்பதாக அரசு இந்த வாரம் அறிவித்துள்ளது. Civic Medical Centre, Pendlehill, NSW எனுமிடத்தில் மருத்துவ சேவை நிலையத்தை நிறுவி நிர்வகித்து வரும் Dr பரண் சிதம்பரகுமார் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share