ஸ்வீடனில் அண்மையில் இந்தத் தொற்று பரவியிருப்பது பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் ஒருவருக்கு இந்த தொற்று பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியா உட்பட மொத்தம் 13 நாடுகளில் mpox தொற்றுகள் பதிவாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் கடந்த 15 நாட்களில் 35 பேர் தொற்றுக்காளாகி இருக்கிறார்கள் என்றும் பல மாநிலங்களிலும் இது பரவியுள்ளது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த வைரஸ் உருவான விதம், அது எவ்வாறு பரவுகிறது, இதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், இதனைத் தடுக்க எப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாம் மேற்கொள்ள வேண்டுமென்று mpox வைரஸ் குறித்த செய்தியின் பின்னணியை விளக்குகிறார், கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வுகளை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் Dr. பவித்ரா வெங்கடகோபாலன் அவர்கள், அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.