SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஒருவர் எளிதாக வாங்கும் Supplement மருந்துகள் பாதுகாப்பானதா?

ஆஸ்திரேலியாவில் மருந்துகளை அனுமதிக்கும் அல்லது நெறிப்படுத்தும் Therapeutic Goods Administration – TGA – தற்போது மருத்துவரின் சீட்டு இல்லாமல் நாம் எளிதாக Pharmacy எனப்படும் மருந்து கடையிலிருந்து வாங்கும் ArmaForce எனும் supplement மருந்து உடலுக்கு நல்லதுதானா என்ற விசாரணையில் இறங்கியுள்ளது. குளிர் காலத்தில் “immunity” எனப்படும் நோய் தடுப்பு சக்தியை உடலில் அதிகரிக்க வைக்கும் மாற்று மருந்துகளை மக்கள் அதிகம் உட்கொள்கின்றனர். இந்த பின்னணியில், supplement அல்லது மாற்று மருந்துகள் குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் Civic Park Medical Centre, Pendlehill ஐ சார்ந்த குடும்ப மருத்துவர் Dr பரண் சிதம்பரகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share