ஆஸ்திரேலிய சினிமா: Samson & Delilah

Source: SBS
மத்திய ஆஸ்திரேலியாவின் மனதைக் கவரும் நிலப்பரப்புக்கு நடுவே, நகர்ப்புற வசதிகள் குறைந்த, நவீன வாய்ப்புகள் அற்ற பூர்வீகக் குடியிருப்பு ஒன்றில் வாழ்ந்து வரும் இருவருக்குள் அரும்பி மலரும் காதல் கதையே, Samson & Delilah. இந்தத் திரைப்படத்துக்கு கதை-திரைக்கதை எழுதி, இசையமைத்து இயக்கியிருப்பவர் Warwick Thornton. பிரான்ஸ் நாட்டின் Cannes சர்வதேசத் திரைப்பட விழாவில், சிறந்த ஒளிப்பதிவுக்கான The Caméra d'Or விருது பெற்ற இந்தக் காதல் கதையின் மூலமாக, ஆஸ்திரேலிய பூர்வக்குடி மக்களின் கடினமான வாழ்க்கையைப் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், பூர்வக்குடியைச் சேர்ந்த இயக்குனர் Thornton. உள்ளத்தை உருக்கும் Samson & Delilah திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.
Share