SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பல லட்சம் மக்களுக்கு கட்டணத்தை திரும்பத் தரும் நான்கு பெரிய வங்கிகள்!

Rear view of latin woman using the ATM. She is going to use her phone to interact with the ATM Source: Moment RF / Javier Zayas Photography/Getty Images
நாட்டில் இயங்கும் நான்கு மிகப் பெரிய வங்கிகளும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் தவிர்த்திருக்கக்கூடிய கட்டணங்களை வசூலித்துள்ளன. சிக்கலான செயல்முறைகளை வங்கிகள் நடைமுறைப்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நிதி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று Australian Securities and Investment Commission அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்த நான்கு வங்கிகளும் அப்படி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை திருப்பிச் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Phoebe Deas & Ciara Hain. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
Share