SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக செங்கோலின் பின்னணி என்ன?

Balachandar
இந்தியாவில் பலநூறு கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாக தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும், மே 28 ஆம் தேதி சாவர்க்கரின் பிறந்த நாள் என்பதால் தேதியை மாற்ற வேண்டும் என்றும் மற்றும் செங்கோல் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பின்னணியில் செங்கோல் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் நம்மிடையே பேசுகிறார் தமிழ் ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான பாலசந்தர். அவரோடு உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share