நாள் 18: இந்திய விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. அரசு பணிய மறுக்கிறது

Farmers protest in India: Image used for representation only. Source: Supplied
இந்திய தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் குளிருக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 18-ஆவது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளும், இடதுசாரி கொள்கை கொண்டோரும் ஊடுருவியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share