இந்தி தெரியாதவர்கள் பயிற்சியிலிருந்து விலகலாம் என்ற கருத்து சர்ச்சையாக வெடிக்கிறது

Source: Raj
இந்தியாவில் யோகா & நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு நடைபெற்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பில், இந்திய மருத்துவங்களை நிர்வகிக்கும் - ஆயுஷ் எனப்படும் அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கொட்டாச்சா இந்தி தெரியாதவர்கள் எல்லாம் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று கூறினார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், ஆயுஷ் அமைச்சக செயலாளர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர்.
Share