இந்திய பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி, சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல கோடி ருபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். திருமண வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கனடாவில் குடியேறிய இந்தியர் என்று அறிமுகம் செய்து பல பெண்களை இவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்தியாவில் சமீப காலங்களாக இது போன்ற பல அப்பாவி மக்கள் தங்கள் உழைத்த பணத்தை வலைத்தளங்களில் நடைபெறும் மோசடிகளில் இழக்கின்றனர். இதற்கு காரணம் என்ன? கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.