தடையை மீறி நிகழ்வு நடத்திய சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கைப் பார்வை!

Mr Sivajilingam Source: SBS Tamil
இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபன் அவர்களது நினைவேந்தலை நடத்த வடக்கு கிழக்கு பகுதிகளில் காவல்துறையின் வேண்டுகோளின் பெயரில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
Share