பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்பொழுது இதுவரையில்லாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, வியாபார நடவடிக்கைகள், மீன்பிடி, விவசாயம், கல்விச் செயற்பாடுகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாரத்தில் மூன்று தினங்கள் மட்டுமே அரச அலுவலகங்கள் இயங்குகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு இயல்பாகவே முடங்கும் நிலைக்கு சென்று கொண்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.