இலங்கையில் காணாமல்போனோரின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிகோரி போராடிவருகின்றார்கள். யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி , அதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் மூலம் தமது உறவுகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.