இது குறித்தும், புதிய தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்ததைத் தொடர்ந்து பிரச்சாரங்களுக்கு அரசியல்கட்சிகள் தயாராகின்றன என்பது குறித்தும் வெளியாகும் செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
விசாரணைக்கு எடுப்பதில்லை - இலங்கை உச்ச நீதிமன்றம் முடிவு

Sri Lankan Supreme Court. Source: SBS Tamil
இலங்கையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் இலங்கை அதிபர் வெளியிட்ட வர்த்தமானியையும் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 07 மனுக்களை விசாரணைக்கு எடுத்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் 10 நாட்கள் பரீசிலனையின் பின்னர் விசாரணைக்கு எடுப்பதில்லை என்று இலங்கை உச்ச நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது.
Share