இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தாருங்கள் !!

Protest in Sri Lanka on Human Rights Day Source: SBS Tamil
நேற்றைய தினம் (டிசம்பர் 10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இதனை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களில் காணாமல்ப்போனவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரியும், சிறையில்வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டனர். அதேவேளையில் நாடாளுமன்றத்திலும் இதற்காக குரல்கள் ஒலித்தன.
Share