மகளை நரபலி கொடுத்ததாக தந்தை வாக்குமூலம்.

Source: Raj
கந்தர்வகோட்டை அருகே 13 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பமாக, மகளை நரபலி கொடுத்ததாக தந்தை வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொடியூர் தைல மரக்காட்டில் உள்ள குளக்கரையில் கடந்த 18ஆம் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார் . இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை கொன்றதாக தந்தை பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை!
Share