'மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை'

Source: Raj
நீதித் துறை மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை விமர்சித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி பிரசாந்த் பூஷனை குற்றவாளி எனக் கடந்த 20 ஆம் தேதி அறிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது. அனால் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் தமிழகத்திலிருந்து எமது செய்தியாளர் ராஜ்.
Share