தமிழகப் பார்வை

Source: SBS Tamil
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் இருவரும் திடீரென உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் உயிரிழந்ததாக தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம் மட்டும் 4 பேர் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களினால் உயிரிழந்துள்ளாதாக வரும் செய்திகள் தமிழகத்தில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது! இந்த செய்தி குறித்து ஒரு பார்வை - தயாரித்து முன் வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share