SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் தீண்டாமை

Group of teen village friends sitting on farm land In Tamil nadu village. Source: iStockphoto / VSanandhakrishna/Getty Images/iStockphoto
தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் பயிலும் அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மாணவர்களுக்கு அருகில் இருக்கும் கடையில் தின்பண்டம் கொடுக்க மறுக்கப்பட்டது. இதை கடைக்காரரே வீடியோவாக எடுத்து வெளியிட்டார், பள்ளிக் குழந்தைகளுக்கு தீண்டாமை கொடுமை நடந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அத்துடன், கடைக்காரரும் அவரின் நண்பரும் கைதானார்கள். இது குறித்த விவரணம். முன்வைக்கிறார்: நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share