Super Singer தம்பதியருடன் ஒரு பிரத்தியேகச் சந்திப்பு

Source: FB
தமிழகத்தின் Super Singer 6 இன் வெற்றியாளர் மக்களிசைப்பாடகர், திரையிசைப் பாடகர், நடிகர் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி Super Singer ராஜலட்சுமி ஆகியோர் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், காதல், பின்னணி, தற்போது தாம் செய்து வரும் வேலைத்திட்டங்கள் எனப் பல விடயங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். மே மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சிட்னி Blacktown Leisure Centre இல், காலை 10 மணி முதல், 8வது ஆண்டாக, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் நடாத்தும் நாள் முழுக்கத் தமிழர்களின் கொண்டாட்டமான சித்திரைத் திருவிழாவில், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியர் நடன மற்றும் இசைக் குழுவினருடன் வந்து பங்கேற்கவுள்ளனர். மேலதிக விவரங்கள்: தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம். அனகன் பாபு 0402 229 517.
Share