மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் வழங்கிய நேர்முகம் – பாகம் 2

Source: Raj
“எழுத்துச் சித்தர்” என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார். அவருக்கு வயது 72. 'மெர்க்குரிப்பூக்கள்', 'தலையணைப்பூக்கள்', 'கரையோர முதலைகள்', 'பயணிகள் கவனிக்கவும்', 'இரும்பு குதிரைகள்' என்று 200-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், சில கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் நமது SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2008 ஆண்டு வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு – பாகம் 2 (நிறைவுப் பாகம்). சந்தித்து உரையாடியவர்: ராஜ் - நமது தமிழக செய்தியாளர்.
Share