SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நா முத்துகுமார்: நினைவில் வாழும் கவிஞர்!
Credit: Raymond Selvaraj
காலம் வெல்ல முடியாத கவிதைகளை தமிழுக்கு விட்டுச் சென்றிருப்பவர் கவிஞர் நா முத்துகுமார். நா.முத்துக்குமாரின் பிறந்த நாள் 12 ஜூலை – வெள்ளி கொண்டாடப்படுகிறது. உயிருடன் வாழ்ந்திருந்தால் ஐம்பதாவது வயதில் காலடி எடுத்துவைத்திருக்கும் கவிஞர் முத்துக்குமாரை நினைவுகூரும் வகையில் அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். நா.முத்துக்குமார் அவர்களை நேரில் சந்தித்து உரையாடியவர் நமது அன்றைய தமிழக செய்தியாளர் R.நாகப்பன் அவர்கள்.
Share