இது குறித்து, புலிகள் மற்றும் யானைகள் பாதுகாவலர் (conservationist), மற்றும் அவை குறித்து ஆவணப்படங்கள் எடுத்து வரும் செந்தில் குமரன் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் துணை இயக்குனராகப் பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் இளங்கோ ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
புலிகளைக் காப்பாற்றுவோம்

Let’s save the Tigers Source: SBS Tamil
மனித செயல்பாடுகளின் காரணமாக - குறிப்பாக வேட்டையாடுதல், வழிப்பாதைகளுக்காகக் காடுகளை அழித்தல் போன்றவற்றால் புலி இனம் அழியும் நிலை ஏற்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 2010ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 29ஆம் நாள் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
Share