SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பணமோசடி - சொத்து முகவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்களுக்கு அரசு குறி

Money laundering crackdown targets real estate agents, lawyers and accountants Source: Getty / Supplied/ Ravi Banuthevan.
நாட்டிற்குள் ஊடுருவி வரும் சட்டவிரோத நிதிகளைத் தடுக்க, ஆஸ்திரேலியாவின் பணமோசடி தொடர்பிலான சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் Attorney-General Mark Dreyfus எச்சரித்துள்ளார். பணமோசடி தடுப்பு நடவடிக்கையில் கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் ஆகிய மூன்று தொழில்களும் அரசினால் குறிவைக்கப்படுகின்றன. Money laundering அல்லது பண மோசடி என்றால் என்ன? நாட்டில் வீட்டு விலை அதிகரிப்பிற்குப் பண மோசடியும் ஒரு காரணமா? பணமோசடி தொடர்பில் ஏன் குறிப்பிட்ட தொழில்கள் அரசினால் குறிவைக்கப்படுகின்றன? இச்செய்தியின் பின்னணியினை விளக்குகிறார் சிட்னியில் நிதி தொடர்பிலான உயர் பதவி வகித்துவரும் ரவி பானுதேவன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share