SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
மெல்பனில் அகதிகள் பேரணிக்கு இடையூறு விளைவித்த Neo-Nazis குழு!

Neo-Nazis clash with pro-refugee protestors Credit: Supplied
ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பின்னணியில் மெல்பனில் நடைபெற்ற போராட்டம் நேற்று அக்டோபர் 22ம் திகதியுடன் 100 நாட்களை எட்டியிருந்தது. இதையொட்டி நேற்று மெல்பன் நகரில் இடம்பெற்ற மாபெரும் பேரணியில் நியோ நாசிக்கள் குழுவொன்று குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளரான ரதி அவர்களின் கருத்துக்களுடன் விவரணமொன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share