SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
மெல்பனில் அகதிகள் மேற்கொண்ட போராட்டம் 100 நாட்களை எட்டியது!

Credit: Supplied
ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மெல்பனில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்றுடன்(22/10/24) 100 நாட்களை எட்டியுள்ளது. 24x7 என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் இத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு வாரத்திற்கு ஒரு தடவை என்பதாக இது மாற்றியமைக்கப்படவுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தனு அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Share