SKIP TO MAIN CONTENT

“என் சந்ததியினரை ஆடக்கூடாது என்று விட்டு, அவர்கள் எப்படி ஆட முடியும்?”

Nrithya Pillai
Nrithya Pillai Source: SBS

பரதநாட்டிய நடனக் கலைஞர், நிருத்யா பிள்ளை, பரதநாட்டிய பாரம்பரியம் குறித்து சில கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறார். அந்தக் கலையை உலகுக்குக் கொடுத்த இசை வெள்ளாளர் பரம்பரையில் வந்ததால் அவ்வாறு செய்ய தனக்கு உரிமை உண்டு என்கிறார் அவர். தனது கோபங்களின் காரணம் குறித்தும் அவரது சமூகத்திற்கான நீதி தேடுதலில் தனது ஈடுபாடு குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பரதநாட்டிய நடனக் கலைஞர், நிருத்யா பிள்ளை, பரதநாட்டிய பாரம்பரியம் குறித்து சில கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறார். அந்தக் கலையை உலகுக்குக் கொடுத்த இசை வெள்ளாளர் பரம்பரையில் வந்ததால் அவ்வாறு செய்ய தனக்கு உரிமை உண்டு என்கிறார் அவர். தனது கோபங்களின் காரணம் குறித்தும் அவரது சமூகத்திற்கான நீதி தேடுதலில் தனது ஈடுபாடு குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இந்த நேர்காணல் பதியப்பட்டது.  கொரோனா குறித்த பல நிகழ்ச்சிகளை நாம் உங்களுக்கு எடுத்து வந்த காரணத்தால், இந்த நேர்காணலை இதுவரை ஒலிபரப்ப முடியவில்லை.  கொரோனா வைரஸ் காலத்தில் நாம் முடங்கிப் போய் இருந்தாலும், நிருத்யா பிள்ளை அவர்களின் குரல் தொடர்ந்து பலமாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.... இந்த நேர்காணல் ஐந்து மாதங்களுக்கு முன் பதியப்பட்டிருந்தாலும் அவரது கருத்துகளில் மாற்றம் ஏதும் இல்லை என்கிறார் அவர்.

இரண்டு பாகங்களாக ஒலிக்கும் நேர்காணலின் இறுதிப் பாகம் இது.

முதல் பாகத்தைக் கேட்க, கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now