மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் நேர்முகம்!

Source: Vadivel Balaji
தமிழகத்தின் பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 45. விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. வடிவேல் போல தொடக்கத்தில் நடித்து மக்களை கவர்ந்த இவர் தனக்கென்று தனி பாணியை அதன்பின் அமைத்துக் கொண்டார். வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலாஜி அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேவேளை நடிகர் வடிவேலு பாலாஜி அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்புக்கு இரு நேர்காணல்களை வழங்கியிருந்தார். அவற்றின் தொகுப்பு இது.
Share