உலக இசை தினம் 2020

Source: SBS TAMIL
உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இம்முறை கொரோனா பேரிடர் காரணமாக உலக இசை தின கொண்டாட்டங்கள் வீடுகளில் முடக்கப்பட்டிருந்தாலும், தனிமையைப் போக்கும் அருமருந்தாக இணையத்தளங்களிலும் காற்று வெளியிடையிலும் இசைவெள்ளம் பொங்கிக் கொண்டேயிருக்கிறது. இந்தநிலையில் உலக இசை தினத்தையொட்டி ஆஸ்திரேலியாவிலுள்ள மூன்றுவகையான இசைப்பின்னணியிலுள்ள கலைஞர்களை சந்திக்கிறோம். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா
Share