சிங்கப்பூரில் மற்றுமொரு தமிழருக்கு மரணதண்டனை!

judges traditional wooden gavel

gold-trimmed wooden judicial gavel Source: Moment RF

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில்  மலேசியாவைச் சேர்ந்த தமிழருக்கு, சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துப்புரவுப்பணி மேற்பார்வையாளரான முனுசாமி ராமமூர்த்தி என்ற 39 வயது நபருக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு சிங்கப்பூரின் Harbourfront Avenue-வில் நிறுத்திவைக்கப்பட்ட அவரது மோட்டார்சைக்கிளிலிருந்த ஒரு பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டடதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் 6.3 கிலோகிராம் பொருளொன்றை, வைத்திருந்ததாகவும் அதில் 57.54 கிராம் ஹெரோயின் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பதினைந்து கிராமுக்கும் அதிகமாக ஹெரோயின் கடத்தப்பட்டால், அதற்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு என்ற அடிப்படையில், முனுசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

முனுசாமிக்கு தண்டனை விதித்த காரணத்தை விளக்கிய 42 பக்க அறிக்கையை, நீதிபதி Audrey Lim நேற்று எழுத்துபூர்வமாக வழங்கியுள்ளார்.

போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மற்றுமொரு தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு கோவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, அவருக்கான தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


2 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now