ஆழியாள் என்று இலக்கியதளத்தில் அறியப்படும் மதுபாஷினி அவர்களின் சமீபத்திய பங்களிப்பு “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” எனும் கவிதைத் தொகுப்பு. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைத் தொகுப்பு நூல் இது. தமிழில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சி. பூர்வீக மக்களின் இன ரீதியான புறக்கணிப்பு, அவமானம், இயலாமை, களவாடப்படும் தலைமுறை, களவாடப்பட்ட தேசம், நிலம், அடையாள நெருக்கடி, ஒடுக்குமுறை....என்று விரிந்துசெல்லும் அவர்களின் பன்முகப் பிரச்சனைகளை உயிர்ப்புடன் முன்வைக்கும் கவித்துவம் ததும்பும் கவிதைகளை ஆழியாள் மொழிபெயர்த்துள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு. சத்தித்து உரையாடியவர்: றைசெல்.
தமிழில் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைகள்!
Source: Mathubashini