Feature

உங்கள் மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் எவ்வாறு உள்ளன?

COVID

Source: Getty Images/Cheryl Bronson

கொரோனா வைரஸ் தொடர்பிலான மேலதிக விபரங்களைப்பெற இங்கே அழுத்துங்கள்.   

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றமை தொடர்பிலான தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள அந்தந்த மாநில மற்றும் பிராந்திய அரசுகளின் இணையத்தளத்தைப் பார்வையிடுமாறு பரிந்துரைக்கிறோம்.

விக்டோரியா

ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு

வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு காரணம் தேவையில்லை

நாளொன்றில் வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் விருந்தினர் எண்ணிக்கை 30 பேர்.

பொது இடங்களில் கூடுவோரின் எண்ணிக்கை 100

வெளியக ஒன்றுகூடல்கள் 100 பேர்.

மதவழிபாடுகள், திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை 2 சதுரமீட்டர்களுக்கு ஒருவர் என்ற விதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

வைத்தியசாலை மற்றும் பராமரிப்பு நிலையங்களில் பார்வையாளர்கள் தொடர்பிலான வரம்பினை சம்பந்தப்பட்ட தரப்பினரே தீர்மானிக்க முடியும்.

  • உணவகங்கள் உள்ளிட்ட hospitality துறைசார் இடங்கள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, 2 சதுரமீட்டர்களுக்கு ஒருவர் என்ற விதியின் அடிப்படையில் இயங்க முடியும்.
  • உடற்பயிற்சிக்கூடங்கள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, 2 சதுரமீட்டர்களுக்கு ஒருவர் என்ற விதியின் அடிப்படையில் இயங்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு:  https://www.coronavirus.vic.gov.au/work-study-and-volunteering-third-step#can-i-go-to-work

முகக்கவசம்

விக்டோரியர்கள் வெளியில் இருக்கும்போது(outdoors) முகக்கவசங்களை அணிவது கட்டாயமில்லை.ஆனால் மக்கள்  எப்போதும் தம்முடன் ஒரு முகக்கவசத்தை வைத்திருக்க வேண்டும். பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, Shopping Centre மற்றும் மக்கள் செறிவான இடங்களில் நிச்சயம் முகக்கவசம் அணியவேண்டும் . 

மேலதிக விபரங்களுக்கு  https://www.coronavirus.vic.gov.au/public-transport

அபராதம்

ஒன்றுகூடல் விதிகளுகளை மீறுபவர்கள்  அபராதம் செலுத்த நேரிடும்.

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டவர்கள் அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

பள்ளிகள்

மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பிவிட்டனர்.

மேலதிகவிபரங்களுக்கு:  https://www.coronavirus.vic.gov.au/work-study-and-volunteering-third-step#can-i-go-to-work

நியூ சவுத் வேல்ஸ்

ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு
உள்ளக ஒன்றுகூடல்கள் 50 பேர். வெளியக ஒன்றுகூடல்கள் 100 பேர்.

மத சேவைகள், திருமணங்கள்,இறுதிச் சடங்குகள்: 2 சதுர மீட்டருக்கு ஒருவர் விதிக்கு உட்பட்டு அதிகபட்சம் பேர்.

வணிகம் மற்றும் பொழுதுபோக்கு

வணிகங்கள் ஒரு COVID-19 SAFETY திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் வளாகத்திற்குள் வந்துசென்ற வாடிக்கையாளர்களின் விபரங்களை வைத்திருக்க வேண்டும். 

மேலதிக விபரங்களுக்கு https://www.nsw.gov.au/covid-19/covid-safe-businesses

NSW மாநிலத்தில் வசிப்பவர்கள் NSW மாநிலத்திற்குள் உல்லாசப்பயணம் மேற்கொள்ள முடியும். வேறுமாநிலத்தவர்களும் நியூ சவுத் வேல்ஸிற்கு சுற்றுலா வரமுடியும். ஆனால் திரும்பிச் செல்லும்போது   தங்கள் சொந்த மாநில விதிகளுக்கு இணங்க நடந்துகொள்ளவேண்டும். ஏராளமான caravan parks மற்றும் camping grounds திறக்கப்பட்டுள்ளன. தேசிய பூங்காக்களைப் பார்வையிடத் திட்டமிடும் பயணிகள் மேலதிக தகவல்களுக்கு www.nationalparks.nsw.gov.au ஐப் பார்க்க வேண்டும்.

அபராதம்

ஒன்றுகூடல் விதிகளுகளை மீறுபவர்கள்  அபராதம் செலுத்த நேரிடும்.

பள்ளிகள்

மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பிவிட்டனர். COVID-19 அறிகுறிகளைக் கொண்ட எந்த NSW மாணவரும் negative சோதனை முடிவு வரும் வரை பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பள்ளி formals, dances, graduations மற்றும் பிற சமூக நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது.

மேலதிக விபரங்களுக்கு:  https://education.nsw.gov.au/covid-19/advice-for-families#School2

குயின்ஸ்லாந்து

உள்ளக ஒன்றுகூடல்கள் 50 பேர். 

வெளியக ஒன்றுகூடல்கள் 100 பேர்.

திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை 200 

வணிகம்    

உணவகங்கள், cafes, pubs, அருங்காட்சியகங்கள், மாநாட்டு அரங்குகள், வழிபாட்டு இடங்கள் நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, 2 சதுரமீட்டர்களுக்கு ஒருவர் என்ற விதியின் அடிப்படையில் இயங்க முடியும்.

பயணக்கட்டுப்பாடு

குயின்ஸ்லாந்து அரசாங்கம் எல்லை பாஸ் மற்றும் identification screening உள்ளிட்ட புதிய எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

அபராதம்

ஒன்றுகூடல் விதிகளுகளை மீறுபவர்கள்  அபராதம் செலுத்த நேரிடும்.

பள்ளிகள்
பள்ளிகள் ஆரம்பமாகிவிட்டன. 

தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு
உள்ளக ஒன்றுகூடல்கள் 10 பேர். 

வெளியக ஒன்றுகூடல்கள் 2 சதுர மீட்டருக்கு ஒருவர் . அதிகபட்சம் 150 பேர்

மேலதிக விபரங்களுக்கு: https://www.covid-19.sa.gov.au/restrictions-and-responsibilities/activities-and-gatherings

வணிகம்

உணவகங்கள், cafes, pubs, அருங்காட்சியகங்கள், மாநாட்டு அரங்குகள், வழிபாட்டு இடங்கள் நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, 2 சதுரமீட்டர்களுக்கு ஒருவர் என்ற விதியின் அடிப்படையில் இயங்க முடியும்.

அபராதம்

ஒன்றுகூடல் விதிகளுகளை மீறுபவர்கள்  அபராதம் செலுத்த நேரிடும்.

பள்ளிகள்
பள்ளிகள் ஆரம்பமாகிவிட்டன. 

மேற்கு ஆஸ்திரேலியா

ஒன்றுகூடலுக்கான வரம்பு  2 சதுர மீட்டருக்கு ஒருவர் என்ற விதியின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும். சில இடங்களுக்கு இது பொருந்தாது. 

பயணக்கட்டுப்பாடு
பள்ளிகள் குறித்த விபரங்களுக்கு https://www.wa.gov.au/organisation/department-of-the-premier-and-cabinet/covid-19-coronavirus-education-and-family-advice  

மேலதிக விபரங்களுக்கு: http://www.wa.gov.au/covid19roadmap

டஸ்மேனியா

ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு 

வீட்டிலுள்ளவர்கள் தவிர 40 பேர்

திருமண நிகழ்வுகள், வழிபாட்டிடங்கள், வர்த்தக வளாகங்கள் 2 சதுர மீட்டருக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் அங்கு அனுமதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உட்புறங்கள்-அதிகபட்சம் 250 பேர்,  மற்றும் வெளிப்புறங்களில்1000 பேர்  


வணிகம்   

வணிகங்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, 2 சதுரமீட்டர்களுக்கு ஒருவர் என்ற விதியின் அடிப்படையில் இயங்க முடியும்.

பள்ளிகள்
எல்லா வகுப்புகளும் தொடங்கிவிட்டன. மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள். 

மேலதிக விபரங்களுக்கு:   https://coronavirus.tas.gov.au/families-community/schools-and-childcare

Northern Territory

ஒன்றுகூடல் கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.

வணிகம் 
மேலதிக விபரங்களுக்கு https//coronavirus.nt.gov.au/business-and-work/business/guidelines-for-events-and-gatherings

பயணக்கட்டுப்பாடு 

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கட்டாய  தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்படுவார்கள்.இதற்கென ஒருவரிடம் 2,500 வசூலிக்கப்படும்.

வேறு மாநிலங்களிலிருந்து வரும் அனைவரும் எல்லை நுழைவு படிவத்தை வருகைக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக பூர்த்தி செய்ய வேண்டும்.

பள்ளிகள்
பள்ளிகள் இயங்கிவருகின்றன.
மேலதிக விபரங்களுக்கு https://education.nt.gov.au/publications/information-for-term-2-2020?SQ_VARIATION_814972=0

Australian Capital Territory

ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு

வீட்டு வருகைக்கு வரம்பு இல்லை.
பொதுநிகழ்வுகளில் 100 பேர்வரை ஒன்றுகூடலாம். இறுதிச் சடங்குகள் உட்பட(ஒவ்வொரு உட்புற இடத்திற்கும் 4 சதுர மீட்டருக்கு 1 நபர் மற்றும் வெளிப்புற இடத்திற்கு 2 சதுர மீட்டருக்கு 1 நபர்)

ஒன்றுகூடல் பற்றியகூடுதல் தகவல்கள்: : https://www.covid19.act.gov.au/news-articles/cautious-step-in-act-covid-19-restrictions

வணிகம் மற்றும் பொழுதுபோக்கு

ACT வணிகங்களுக்கான வழிகாட்டல்கள்
பள்ளிகள் 
On-campus கற்றல் முறைக்கு அரச பள்ளிகள் திரும்பிவிட்டன.
மேலதிக விபரங்களுக்கு https://www.covid19.act.gov.au/community/students-education-childcare

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

மாநிலவாரியாக என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள:   NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

 


Share

Published

Updated

By SBS/ALC Content
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
உங்கள் மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் எவ்வாறு உள்ளன? | SBS Tamil