SKIP TO MAIN CONTENT

1.6 மில்லியன் டொலர்களுடன் பணப்பெட்டி கண்டெடுப்பு!

cash
Source: AFP

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1.6 மில்லியன் டொலர் பணத்துடன் சூட்கேஸ் ஒன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Wetherill Park-இலுள்ள Warehouse ஒன்றினுள் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பரிசோதனை செய்யச் சென்ற இடத்திலேயே, இந்த பணப்பெட்டி காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.

இது உரிமைகோரப்படாத பணமாக அறிவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒருவேளை இது உங்களுடையதாக இருந்தால் உடனடியாகத் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

அதேநேரம் இவ்விடயம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்தில் Crime Stoppers ஐத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் இந்த அறிவிப்பிற்கு சமூக வலைத்தளத்தில் ஒருவர் அளித்த பதிலும் அதற்கு காவல்துறையினர் வழங்கிய நகைசசுவையான பதிலும் கீழே காணப்படுகின்றது.

cash
Source: AFP Facebook

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now