கடந்த 2013ம் ஆண்டு 1 பில்லியனுக்கும் அதிகமான Yahoo பயன்பாட்டாளர்களின் கணக்குகளுக்குள் hackers-இணையத் திருடர்கள் ஊடுருவியுள்ளதாக Yahoo நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கடந்த 3 ஆண்டுகளாக மௌனம் காத்துவந்த Yahoo நிறுவனம் தற்போது இதனை ஒப்புக்கொண்டுள்ளது.
குறித்த ஊடுருவல் மூலம் Yahoo பாவனையாளர்களின் பெயர்கள், தொலைபேசி இலக்கங்கள், Pass word-கடவுச் சொற்கள் மற்றும் கடவுச் சொற்களுக்கான இரகசிய கேள்விகள் போன்ற விபரங்கள் திருடப்பட்டதாகவும் வங்கிக் கணக்கு மற்றும் கடனட்டை உள்ளிட்ட விபரங்கள் திருடப்படவில்லை என தாம் நம்புவதாகவும் Yahoo நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இவ்வாறான இணையத்திருட்டுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் தமது கடவுச்சொற்களையும் அதற்கான கேள்விகளையும் அடிக்கடி மாற்றுவது சிறந்ததென இணைய வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டும் இணையத்திருடர்களின் ஊடுருவல் மூலம் 500 மில்லியன் Yahoo பயன்பாட்டாளர்களின் கணக்குகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share