Air New Zealand விமானநிறுவனம் ஊடாக ஒரு டொலர் கட்டணத்துடன் விமானப்பயணத்தை மேற்கொள்ளமுடியும் என்ற அறிவிப்பு தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Air New Zealand, அதையொட்டி ஒரு டொலருக்கு இரு விமானப் பயணச்சீட்டுகளை வழங்குவதாக போலிச்செய்தி ஒன்று முகநூல் பக்கங்களில் பரவிவருகின்றது.
இது தொடர்பில் Auckland-இலுள்ள பெண்மணி ஒருவர் Air New Zealand-க்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த விமானநிறுவனம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.
அந்த அறிவிப்புக்கும் தமது விமானநிறுவனத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இதனூடாக யாராவது ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்தால் அதற்குத் தாம் பொறுப்பல்லவென்றும் Air New Zealand அறிவித்துள்ளது.
