ஆஸ்திரேலியாவின் பிரபல Powerball அதிஷ்டலாப சீட்டிழுப்பின் அடுத்த வாரத்திற்கான தொகை சுமார் 100 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
கடந்த வியாழக்கிழமைக்குரிய Powerball தொகையான 80 மில்லியன் டொலர்கள் ஜாக்பொட் எவராலும் வெல்லப்படாததையடுத்து அடுத்த வாரத்திற்கான தொகை 100 மில்லியன்களாகியுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் Powerball சீட்டிழுப்பில் யாராவது இத்தொகையை வெல்லும்பட்சத்தில், ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக தனிநபர் ஒருவரால் வெல்லப்பட்ட அதிகூடிய தொகை என்ற சாதனை பதிவுசெய்யப்படும்.
கடந்த 2016ம் ஆண்டு Hervey Bay -ஐச் சேர்ந்த தம்பதியர் 70 மில்லியன் டொலர்களை வென்றமையே தற்போதைய சாதனையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
