ஆஸ்திரேலியாவின் Powerball jackpot வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப்பணமாகிய 100 மில்லியன் டொலர்களை இரண்டு அதிஷ்டசாலிகள் வெற்றிபெற்றுள்ளார்கள் என்று Powerball நிறுவனம் அறிவித்ததுள்ளது.
ஆனால், குறிப்பிட்ட வெற்றியாளர்கள் தங்களது தொடர்பு விவரத்தை சரியாக பதிவு செய்யாத காரணத்தினால் அவர்களை தங்களால் தொடர்புகொண்டு வெற்றிச்செய்தியை அறிவிக்கமுடியாதுள்ளதாக Powerball நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் இரவு 7.30 வரை அதிஷ்டலாப சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக ஆஸ்திரேலியாவின் சகல பாகங்களிலும் பல லட்சக்கணக்கான மக்கள் அலைமோதிக்ககொண்டிருந்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற அதிஷ்டலாப குலுக்கலில் 100 மில்லியன் அதிஷ்ட பணத்தை வெல்லப்போவது யார் என்று நாடு முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
Powerball நிறுவனம் அறிவித்துள்ளபடி, இந்த அதிஷ்ட பணத்தை சிட்னி நபர் ஒருவரும் விக்டோரிய நபர் ஒருவரும் வெற்றியீட்டியுள்ளார்கள்.
ஆனால், அவர்கள் யார் என்பது குறிப்பிட்ட நபர்கள் தாங்களாக முன்வந்து அடையாளத்தை உறுதிப்படுத்தினால் மாத்திரமே தெரியவரும்.
வெற்றிபெற்ற இலக்கம் 3, 13, 27, 31, 32, 33, 35 Powerball 3 ஆகும்.
தாங்கள்தான் அதிஷ்டசாலிகள் என்பதை இரகசியமாக உறுதிப்படுத்தி பணத்தை பெற்றுகொள்வதற்கு அழைக்கவேண்டிய இலக்கம் 131 868.
தலா 50 மில்லியன் டொலர்களை வெற்றிபெற்ற இருவரை தவிர, மேலும் 15 அதிஷ்சாலிகள் நேற்றைய அதிஷ்ட லாப குலுக்கலில் தலா ஒரு லட்சத்து 22 ஆயிரம் டொலர்களை வெற்றிபெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
