SKIP TO MAIN CONTENT

102 வயதிலும் ஓய்வு பெற மறுக்கும் ஆஸ்திரேலிய அறிவியலாளர்!

David Goodall
Source: ABC Australia

3 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

ஆஸ்திரேலியாவின் ஆகக்கூடிய வயதுடைய அறிவியலாளர் David Goodall-ஐ இனிமேல் பணி நிமித்தம் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டாம் என பேர்த்திலுள்ள Edith Cowan பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

102 வயதான David Goodall  தற்போதும் வாரத்தில் 4 நாட்கள் இரண்டு பஸ் மற்றும் ஒரு தொடரூந்து ஆகியவற்றில் ஏறி சுமார் 90 நிமிடங்கள் பயணம் செய்து Edith Cowan பல்கழைக்கழகத்திற்குச் செல்கிறார்.

எனினும் இவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்திற்கொண்டு இனிமேல் பல்கலைக்கழக்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டிலிருந்தே அவர் வேலை செய்யலாம் எனவும் குறித்த பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இந்த விடயம் சுயமாக இயங்கும் தனது தந்தையை மனதளவில் பாதிக்கும் என அவரது மகள் விமர்சித்துள்ள நிலையில் எந்த வழியிலாவது பல்கலைக்கழகத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கவே விரும்புவதாக David Goodall தெரிவித்துள்ளார்.

சூழலியல் துறையில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் David Goodall  3 முனைவர் பட்டங்களுக்குச் சொந்தக்காரர் என்பதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் உயர் விருதான member of the Order of Australia-வை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

At 102, David Goodall is Australia's oldest working scientist.

He's had a career in ecology spanning 70 years, producing more than 100 research papers, earning three doctorates and receiving a member of the Order of Australia for his contribution to the field.

His work has taken him around the world, but these days you will find him at his office at Edith Cowan University.

He still goes to the Joondalup campus at least four days a week, making the 90-minute commute that involves catching two buses and a train.

He has served as an honorary research associate at the university for almost two decades.

But now he has been told to pack up his office, with the university declaring him unfit to be on campus.

The Dean of the School of Sciences, Andrew Woodward, said the decision was made after numerous concerns were raised by staff and students about Dr Goodall's safety and wellbeing.

His daughter, Karen Goodall-Smith, said that would have a dramatic impact on his sense of independence and mental wellbeing.

She expressed her sentiments to the university when it contacted her earlier this year to ask for her input.

"I said it would be the worst thing you could possibly do, I don't know if he would survive it," she said.

Edith Cowan University said it wanted to continue its relationship with Dr Goodall and had just renewed his honorary professor position for a further three years.

However, it said he would have to work from a home office.

"We're going to be providing a computer, a printer," Mr Woodward said.

"When he needs to come or he would like to come on campus for meetings or to interact with other staff and students he won't bear any cost for that, we'll arrange that transport for him."

Dr Goodall said he does not have room for a home office in his one bedroom unit and he was looking for an alternative space.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now