விக்டோரியாவில் சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரம் டொலர் பெறுமதியான காளை மாட்டைக் காணவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் Yea பகுதிக்கு அண்மையில் காணாமல்போயுள்ள இந்தக் காளை மாட்டினைத் தேடி பொலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
கடந்த டிசெம்பர் மாதம் 27 ஆம் திகதிக்கும் 29 ஆம் திகதிக்கும் இடையில் காணமல்போயுள்ளதாக நம்பப்படுகின்ற இந்தக் காளைமாடு தொடர்பாக டிசெம்பர் 31 ஆம் திகதி தமக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ள பொலீஸார், ஹெலிக்கொப்டர் உதவியுடன் தேடுதலில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Texas Powerplay எனப்பெயரிடப்பட்டுள்ள இக்காளை மாடு காணமல்போனதற்கான காரணத்தை இன்னமும் தங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் விக்டோரிய பொலீஸார் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
