சமூக ஊடகங்களில் இன்றியமையாத அம்சமாய் மாறிப்போன hashtag-ஹேஷ்டேக், தனது 10வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.
ஹேஷ்டேக் என்பது, எதாவது முக்கியமான குறிச்சொல் முன்னர் # என்று போடுவது. உதாரணமாக #barcelona, பாசிலோனா பற்றி யாரேனும் எதாவது ட்வீட் செய்கின்றனர் என்றாலோ அல்லது பேஸ்புக்கில் பதிவிடுகின்றனர் என்றாலோ, #barcelona ஹேஷ்டேக்கை அவர்களது பதிவில் சேர்க்க வேண்டும். #barcelona என்கிற ஹேஷ்டேக் ட்வீட்டில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
அந்த ஹேஷ்டேக்கை யாரேனும் க்ளிக் செய்தாலோ , அல்லது தேடினாலோ, அந்த குறிப்பிட்ட ஹேஷ்டேக் உள்ள அனைத்து பதிவுகளையும் பார்க்க முடியும். ஆகையால், #barcelona என்ற ஹேஷ்டேக்கை க்ளிக் செய்யும்பொழுது பாசிலோனா பற்றிய அனைத்து ட்வீட்டுகளையும் படிக்க முடியும்.
மிகவும் அதிகம் விவாதிக்கப்படும், பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் Trend list-இல் வரும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு 23/08 அன்று, Chris Messina என்பவர் ட்விட்டரில் குழுவொன்றை ஒருங்கிணைப்பதற்கு இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தலாம் என ஆலோசனையொன்றை முன்வைத்தார்.
அன்றிலிருந்து ஆரம்பித்த ஹேஷ்டேக் பாவனை இன்று ட்விட்டரில் மட்டும் ஒரு நாளைக்கு 125 மில்லியன் தடவைகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
