SKIP TO MAIN CONTENT

11 கோடி டொலர் சீட்டிழுப்பு: ஆஸ்திரேலியாவின் அதிஷ்டசாலி யார்?

Powerball
Source: Insight

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய அதிஷ்ட லாபச்சீட்டு வரலாற்றில் முதல் தடவையாக அடுத்த வாரம் 11 கோடி டொலர்களுக்குரிய குலுக்கல் இடம்பெறவுள்ளது.

நேற்று இடம்பெற்ற 10 கோடி டொலர் அதிஷ்டத்துக்கான குலுக்கலின்போது முதலாவது டிவிஷனில் எவரும் தெரிவுசெய்யப்படாததை அடுத்து, அடுத்த வியாழக்கிழமை இடம்பெறவுள்ள குலுக்கல் 11 கோடி டொலர்களாக உயர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 10 கோடி டொலர்களுக்கான அதிஷ்டலாப சீட்டிழுப்புத்தான் அதி உயர்ந்த பரிசுக்கான குலுக்கலாக மூன்று தடவைகள் இடம்பெற்றிருக்கிறது.

2012 ஆம் ஆண்டு ஒரு தடவையும் கடந்த வருடமும் இந்த வருட ஆரம்பத்திலும் இந்த குலுக்கல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனியொருவர் இந்த 11 கோடி டொலர்களை வெற்றிபெற்றால், அதுவே ஆஸ்திரேலிய வரலாற்றில் தனியொருவரின் அதிகூடிய வெற்றிப்பணமாகவும் அமையும்.

இதுவரையில் உள்ள புள்ளவிவரங்களின்படி, சிட்னியை சேர்ந்த பெண்ணொருவர் 10 கோடி 70 லட்சம் டொலர்களை இந்த வருடம் ஜனவரி மாதம் வென்றிருக்கிறார். இவரது சாதனை முறியடிக்கப்படுமா என்பதனை அறிவதற்கு எதிர்வரும் வியாழன்வரை பொறுத்திருக்கவேண்டும் என்கிறார் அதிஷ்டலாபச்சீட்டு நிறுவன பேச்சாளர்Matt Hart.

அடுத்தவாரம் இடம்பெறவுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிஷ்ட லாபச்சீட்டிழுப்புக்குரிய சீட்டினை மூவரில் ஒரு ஆஸ்திரேலியர் வாங்குவர் என்று புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now