SKIP TO MAIN CONTENT

11 கோடி டொலர் சீட்டிழுப்பு: அதிஷ்டத்தை பங்குபோட்ட மூவர்!!

Powerball
Source: Insight

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய அதிஷ்ட இலாபச்சீட்டுழுப்புக்களில் ஒன்றாக கருதப்பட்ட 11 கோடி டொலர்களுக்கான குலுக்கல் நேற்றிரவு இடம்பெற்றது. இந்த தொகை மூன்று அதிஷ்டசாலிகளுக்கு கிடைத்துள்ளது.

விக்டோரியா, நியூசவுத் வேல்ஸ் மற்றும் அடிலெய்ட் ஆகிய இடங்களை சேர்ந்த மூவர் தலா மூன்றுகோடி 66 லட்சம் டொலர்களை வெற்றியீட்டியுள்ளார்கள்.

விக்டோரியா மற்றும் நியூத் சவுத்வேல்ஸ் மாநிலங்களை சேர்ந்த வெற்றியாளர்கள் தங்களது வெற்றி தொடர்பாக அறிவிக்காதபோதும் வெற்றியீட்டிய அடிலெய்ட் இளைஞர் தனக்கு கிடைத்துள்ள அதிஷ்டத்தினால் அதிர்ச்சியடைந்துபோயுள்ளார். தனது இதயம் மணிக்கு லட்சக்கணக்கான கிலோமீற்றர் வேகத்தில் பறந்துகொண்டிருப்பதாகவும், கிடைத்திருக்கும் பணத்தை தனது குடும்பத்தினருக்காகவும் தொண்டுப்பணிகளுக்காகவும் செலவிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வேலையிலிருந்து விலகக்கூடும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விக்டோரியாவிலும் நியூசவுத் வேல்ஸிலும் வெற்றியீட்டிய இரண்டு அதிஷ்டசாலிகளை தொடர்புகொள்வதற்கான விவரங்கள் தங்களிடம் இல்லாத காரணத்தினால் அதிஷ்டசாலிகள் தங்களது இலக்கத்தை சரிபார்த்து வெற்றித்தொகையை பெற்றுக்கொள்ளுமாறு The Lott நிறுவனம் அறிவித்துள்ளது. வெற்றியிலக்கம் 6, 13, 1 , 11, 23, 27, 16 & Powerball 11.

கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 12 மாத காலப்பகுதியில் 429 முதல் டிவிஷன் மூலம் 1.16 பில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியர்கள் வெற்றியீட்டியுள்ளார்கள். இவர்களில் அதிகமானவர்கள் விக்டோரிய மாநிலத்தவர்கள் என அதிஷ்டலாபச்சீட்டு நிறுவனத்தரவுகள் தெரிவித்துள்ளன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now