BMW நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான BMW 3 Series தர வாகனங்களில் Airbag(Takata) பிரச்சினையிருப்பதால் குறிப்பிட்ட வாகன உரிமையாளர்கள் இந்த வாகனங்களை ஓட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு BMW நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டுக்கும் 2000 ஆம் ஆண்டுக்கும் இடையில் தயாரிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரத்து 663 BMW 3 Series வாகனங்கள் இவ்வாறான பிரச்சினைக்குள்ளாகியிருப்பதாக BMW நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
குறிப்பிட்ட வாகனங்களை ஓட்டுபவர்கள் BMW நிறுவனத்துக்கு அறிவித்தால் தங்களது திருத்துனர்கள் வீட்டுக்கு வந்து வாகனத்தை எடுத்துச்செல்வார்கள் என்றும் இடைப்பட்ட காலத்தில் ஓட்டுவதற்கு வேறு வாகனங்களை வழங்குவதற்கு தங்களது நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என்றும் BMW தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சகல வாகனங்களுக்கும் Airbags கொள்முதல் செய்வதற்கு குறைந்தது 18 மாதங்களாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு தகுந்த சேவையை வழங்குவது தங்களது பொறுப்பு என்றும் BMW உறுதியளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தமைக்கு குறித்த ரக கார்களில் பொருத்தப்பட்ட Takata Airbag காரணமாக இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இவ் அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
