SKIP TO MAIN CONTENT

12 வயது பெர்த் சிறுமியின் கர்ப்பத்துக்கு 14 வயது ‘சகோதரனே’ காரணம்?

New born
Source: Pixabay

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

பெர்த் நகரில் இம்மாத ஆரம்பத்தில் குழந்தையை பெற்றெடுத்த 12 வயது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் அச்சிறுமியின் வளர்ப்புத் தந்தை அல்லது தாய்க்கு  பிறந்த 14 வயது சகோதரனே(stepbrother) என்று The Western Australian பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு குழந்தையுடன் இந்த சிறுமி பெர்த் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது ஆஸ்திரேலியாவிலேயே மிகக்குறைந்த வயதில் குழந்தைக்கு தயாரான சிறுமி இவரே என்று சுகாதாரத திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. கூடவே, இந்த சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை தேடி பொலீஸார் விசாரணைகளையும் ஆரம்பித்திருந்தனர்.

தற்போது சிறமியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டறிந்தபின்னரும் தொடர்ச்சியாக விசாரணைகைள மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள பொலீஸார் அவருக்கு பிறந்துள்ள குழந்தை தொடர்பாகவும் தாய் - சேய் நலன் குறித்தும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரோடு பேசிவருவதாக கூறியுள்ளனர்.

தான் கர்ப்பமானது தனக்கு தெரியாது என்று கூறியுள்ள குறிப்பிட்ட சிறுமி வீட்டில் குழந்தையைப்பெற்றுக்கொண்ட பின்னரே வைத்தியசாலைக்கு வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது இரண்டாவது பெற்றோருக்கு பிறந்த சகோதரனுடன் கூடி வாழ்ந்திருந்தாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

16 வயதுக்கு குறைந்த இரண்டு நபர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றம் எனப்படுகின்றபோதும் இந்த சம்பவத்தில் பொலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்களா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், தாங்கள் விசாரித்துவருகின்ற இந்த சம்பவம் மிகுந்த சிக்கல் நிறைந்ததும் கவலைக்குரியதும் என்றும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now