SKIP TO MAIN CONTENT

120 வயதுவரை வாழ விருப்பமா? அறிமுகமாகிறது மாத்திரை!

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: The Telegraph, UK



Skip to article content

வயது முதிர்வதைத் தடுப்பதற்கான உலகின் முதலாவது மாத்திரை மனிதர்களில் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது.

இந்தப் பரிசோதனை வெற்றியளிக்கும் பட்சத்தில் மனிதர்கள் 120 வயதுவரை ஆரோக்கியமாக வாழலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் metformin மருந்து விலங்குகளில் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட போது அவ்விலங்குகளின் ஆயுள் அதிகரித்தமை நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து மனிதர்களிலும் ஏன் இவ்வாறான ஒரு முறையைப் பரீட்சித்துப் பார்க்கக்கூடாது என எண்ணிய US Food and Drug Administration இதற்கான அனுமதியை வழங்கியது.

TAME- Targeting Aging with Metformin  எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பரீட்சார்த்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் 70 வயது நபர் ஒருவர் 50 வயது நபருக்குரிய தேகாரோக்கியத்துடன் இருப்பார் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்மூலம் வயது முதிர்ந்தவர்களில் ஏற்படும் Alzheimer's மற்றும் Parkinson போன்ற நோய்ப்பாதிப்புக்களையும் தவிர்க்கலாம் அல்லது தள்ளிப்போடலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now