SKIP TO MAIN CONTENT

Northern Territory-க்கு குடிபெயர்ந்து வேலை செய்தால் 15 ஆயிரம் டொலர்கள் கொடுப்பனவு!

Australia map
Source: pexels

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவின் Northern Territory-க்கு குடிபெயர்ந்து அங்கே வேலைசெய்யமுன்வரும் குடும்பங்களுக்கு சுமார் 15 ஆயிரம் டொலர்களும், தனிநபர்களுக்கு 7250 டொலர்களும் கொடுப்பனவு வழங்கப்படும் என Northern Territory அரசு அறிவித்துள்ளது.

Northern Territory-க்கு பெருமளவானோரை வரவழைக்கும் இச்செயற்றிட்டத்திற்கென 9.3 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு குடியேறுபவர்கள் என்னென்ன வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதற்கான சிறப்பு தொழில்துறை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கு என்னென்ன தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை கீழ்க்காணும் இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

https://nt.gov.au/employ/for-employers-in-nt/hard-to-fill-jobs-in-the-nt

இவ்வாறு Northern Territory-க்கு குடிபெயர்ந்து அங்கு பணிபுரியும் தனிநபருக்கு, வேறு இடத்திற்கு குடிபெயர்ந்ததற்கான கொடுப்பனவாக முதலில் 3000 டொலர்கள் கொடுக்கப்படும். தம்பதியர் என்றால் 6000 டொலர்களும் குடும்பம் என்றால் 7000 டொலர்களும் வழங்கப்படும்.

ஆறு மாதங்களின் பின் வாகன பதிவு கட்டணம், சிறுவர் பராமரிப்பு, வெளியில் உண்ணுதல் போன்ற உள்ளூரில் ஏற்படும் செலவுகளுக்கான கொடுப்பனவாக 1250 டொலர்கள் வழங்கப்படும்.

5 வருடங்கள் அங்கு வாழ்ந்ததன் பின் குடும்பங்களுக்கு மற்றுமொரு 7000 டொலர்களும், தம்பதியருக்கு 6000 டொலர்களும், தனிநபருக்கு 3000 டொலர்களும் கொடுக்கப்படும்.

இச்செயற்றிட்டத்திற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 1 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் அதேநேரம் இது குறித்த மேலதிக விபரங்கள் அக்டோபர் 1ம் திகதி வெளியிடப்படும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now