SKIP TO MAIN CONTENT

கொரோனா: மூடப்படும் நிலையில் ஆஸ்திரேலியாவின் 16 ஆயிரம் சமூக விளையாட்டு கழகங்கள்!

People playing football in a park
File photo Source: AAP

1 min read

Published


Skip to article content

கொரோனா பரவல் காரணமாக தேசிய ரீதியில் முடக்கப்பட்டுள்ள விளையாட்டு நடவடிக்கைகளினால் ஆஸ்திரேலியாவிலுள்ள சுமார் 16 ஆயிரம் சமூக விளையாட்டு கழகங்கள் இழுத்து மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய விளையாட்டு கழகங்கள் சம்மேளனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலிய மாநிலங்கள்வாரியாக பல்லாயிரக்கணக்கான சமூக விளையாட்டுக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கழகங்களில் பெரும்பாலானவை கழகத்தின் அங்கத்துவ பணம், நிதி திரட்டும் நிகழ்வுகள், காட்சி ஆட்டங்கள் மற்றும் வெளியாட்களின் உதவிகள் ஆகியவற்றின் துணையோடு இயங்குபவை.

தற்போதைய கொரோனா காலகட்டத்தில் நிதிவருகைகளுக்கான வாய்ப்புக்களை இந்த கழகங்கள் முற்றாக இழந்துள்ளமையால் இவை முழுமையாக இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம்முதல் மேற்படி கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை சரிசெய்வதற்கு அடுத்த மூன்று மாதங்களில், 30 முதல் 40 கோடி டொலர் உதவியாவது தேவை என்று ஆஸ்திரேலிய விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now